மரக்கறிப் புரியாணி இலங்கை சமையல்

Loading...

மரக்கறிப் புரியாணி இலங்கை சமையல்தேவையான பொருட்கள்:

3 சு.கலந்து வெட்டிய மரக்கறி
125 கிராம் உருளைக்கிழங்கு
1¾-2 சு.தண்ணீர்
1 சு.சம்பா அரிசி
2 தே.க.உப்புத்தூள்
8 செ.மீ.நீளமுள்ள றம்பை இலை
4 பச்சைமிளகாய்,வட்டம் வட்டமாக வெட்டவும்
8-10பல்லுப் பூடு, 2 சீவல் இஞ்சி என்பவற்றை ஒன்றாக அரைத்து எடுக்கவும்
5-6 கருவேப்பிலை, கிழித்துப் போடவும்
½ தே.க.ஏலப்பொடி
3 மே.க.நெய்
3 மே.க.வெட்டிய வெங்காயம்
சிறிது கேசரிப்பவுடர்
125 கிராம் தக்காளிப்பழம்

செய்முறை:
இதற்கு, முட்டைக்கோவா, கரற், லீக்ஸ், கோவாப்பூ என்பவற்றைச் சம அளவுகளில் கலந்து எடுத்து, துப்பரவாக்கி, கழுவி, வடியவிட்டு, சிறு துண்டுகளாக அரிந்து, வேகவைத்த பச்சைபட்டாணியிலும் கொஞசம் கலந்து கொள்க. உருளைக்கிழங்கை அவித்து, உரித்து, 1செ.மீ. கனமுள்ள துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பானையில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அரிசியைக் களைந்து வடித்துப் போட்டு, 1 தேக்கரண்டி உப்பு, அரைவாசி றம்பை இலை என்பவற்றையும் போட்டு, பதமாகவும் முத்துமுத்தாகவும் வேகவிட்டு இறக்கவும்.
ஒரு அகலமான தாச்சியில் 1 மேசைக்கரண்டி நெய்யைக் காயவிட்டு, வெட்டிய மரக்கறியையும், மீதி உப்பையும் போட்டு, 2 நிமிடங்கள் கிளறி விட்டு, பிறகு ஒரு மூடியால் மூடி, நிதானமான நெருப்பில் விட்டு, 4-5 நிடங்களின் பின்னர் திறந்து கிளறி, மரக்கறி வதங்கியவுடன் வழித்து எடுக்கவும்.

மீண்டும் அத்தாச்சியை அலம்பி, அடுப்பில் வைத்து, 1½ மேசைக்கரண்டி நெய் விட்டு, காய்ந்தவுடன் மீதி றம்பையிலையைக் கிழித்துப்போட்டு, வெங்காயம், பச்சைமிளகாய், அரைத்த பூடு-இஞ்சி, கருவேப்பிலை என்பவற்றையும் போட்டு, வாசைன வரப் பொன்னிறமாக வதக்கி, இதில் அவித்த உருளைக்கிழங்கு, வதக்கிய மரக்கறி என்பவற்றை நன்றாகக் கலந்து, கடைசியாக வெந்த சோறு, ஏலப்பொடி என்பவற்றுடன், கேசரிப்பவுடரையும் ஒரு தேக்கரண்டித் தண்ணீரில் கரைத்துவிட்டு தட்டகப்பையினால் செம்மையாகக் கலந்து, நன்கு சூடேறியவுடன் இறக்கவும். இதனை ஒரு தட்டையான பாத்திரத்தில் போட்டு, தக்காளிப்பழத்தைப் பெரிய துண்டுகளாக வெட்டி, ¼ தே.க.உப்புச் சேர்த்துப் புரட்டி, மீதி ½ மேசைக்கரண்டி நெய்யில் மசியாதபடி வதக்கி, இறக்கி, மேலே போட்டு அலங்கரித்துக் கொள்க

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply