மனித உயிர்களை மெதுவாக குடிக்கும் நோய்! எய்ட்ஸ் தினம்

Loading...

மனித உயிர்களை மெதுவாக குடிக்கும் நோய்! எய்ட்ஸ் தினம்உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.
எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் ஆகும்.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவரது உடல் நோய்களை எதிர்க்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார்.

உலகில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் கொண்ட நாடுகளில் இந்தியா 3வதாக உள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கணக்குகள் படி இந்தியாவில் 2.1 மில்லியன் பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. அதில் 36% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2014-15 ஆண்டில் மட்டும் 30 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான 36.9 மில்லியன் பேரில் 19 மில்லியன் பேருக்கு தங்களுக்கும் இந்த நோய் இருப்பதை உணராமலே வாழ்ந்து வருகின்றனர். சீனாவில் மட்டும் 6.3 மில்லியன் நபர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எய்ட்ஸ்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம்.

எய்ட்ஸ் நோயை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்நோய் பரவாமல் தடுக்கவும், இதன் தாக்கத்தை மக்கள் புரிந்துகொள்வதுமே இந்நாளின் நோக்கமாகும்.

எப்படி நோய் பரவுகிறது?

எச்.ஐ.வி, பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் நோய் பரவிவருகிறது.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் குறித்து தெரியாமலேயே வாழலாம். ஆனால், அவருக்கு எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை அவரால் உணர முடியும்.

80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகின்றனர்.

1. பாதுகாப்பற்ற உடல் உறவு 2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது. 3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.

ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

ஆரம்பகால அறிகுறிகள்

1. எடை குறைதல்

உங்கள் உடல் எடையில் வேகமான மாற்றங்கள் – அதாவது வழக்கத்தை விடவும் வேகமாக உடல் எடை குறைந்து வந்தால், நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எடை குறைவது இந்நோயின் முன்னேற்றத்தை குறிப்பதாக இருக்கும். இதன் அர்த்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

தொடர்ந்து இருமல்

தொடர்ச்சியான இருமல் எச்.ஐ.வி நோயின் அறிகுறியே. ஆனால், குப்பைகளை சுவாசிப்பதால் ஏற்படும் அலர்ஜியாகவும் கூட இது இருக்கலாம். எனினும், தொடர்ந்து வரும் காலங்களில் எச்.ஐ.வி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகரிக்கும்.

களைப்பு

நாட்களின் பெரும்பாலான நேரங்கள் நீங்கள் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்பதாக உணர்ந்தால், அதனை எச்.ஐ.வி பாதிப்பாக கருத முடியும். எச்.ஐ.வி-வின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாகவே இந்த களைப்பு நிலை உள்ளது.

தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

உங்களுடைய தசைகள் மற்றும் மூட்டுகளில் தாங்கமுடியாத வலிகள் இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதுவும் எச்.ஐ.வி-ன் அறிகுறியாக இருக்கலாம்.

தலைவலி

தலைவலி உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டால், அதனையும் எச்.ஐ.வி பாதிப்பின் அறிகுறியாக கருதலாம். அது எச்.ஐ.வி-க்கான ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், ARS பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

தோலை கவனியுங்கள்

எச்.ஐ.வி நோயின் ஆரம்ப மற்றும் முற்றிய நிலைகளில் தோல் சொரசொரப்பாக மாறிவிடும். இதனால் உங்கள் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு மிக்க பகுதிகள் உருவாகின்றன. எனவே, உங்கள் தோலை சற்றே நெருக்கமாக கவனிக்கவும்.

எய்ட்ஸ் எப்படி பரவாது?

1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது. 2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது. 3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது. 4.நீச்சல் குளம், சலுன் கடைகள் மூலம் பரவாது. 5.ஒவ்வொரு முறையும் துய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம். 6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

எய்ட்ஸ் பரவாமல் இருக்க

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் உலக எய்ட்ஸ் தினங்களில் எய்ட்ஸ் தொடர்பான உண்மைகளும், விளக்கங்களும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply