மனசு அழகா இருந்தா உடம்பும் அழகாயிடும்: த்ரிஷாவின் அழகு ரகசியம்

Loading...

மனசு அழகா இருந்தா உடம்பும் அழகாயிடும்  த்ரிஷாவின் அழகு ரகசியம்அழகு என்பது உடலைப் பொருத்த விசயமா? அது மனதோடு தொடர்புடையதா என்று பல கேள்விகள் எழும். உடல் அழகாயிருப்பதற்கு மனம் முக்கிய காரணமாகிறது. உடம்பில் கொழுப்பு அதிகமாகி பருமனாகிவிட்டால் கேட்கவே வேண்டாம் கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் மனம் சுருங்கிப்போய்விடும். எனவே உடல் எடை ஏறாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாதுறையில் இருந்தாலும் ஒட்டி இடுப்போடு அங்கங்கே அழகான அளவோடு இருக்கும் நடிகை த்ரிஷா தனது அழகை கட்டுப்பாட்டோடு வைக்க அதிகம் மெனக்கெடுவதில்லையாம். நிறைய தண்ணீர், சாத்துக்குடி, மாதுளை ஜூஸ் குடிக்கிறாராம்.
நீச்சல் மிகவும் பிடித்தமான விசயமாம். வெளிநாட்டிற்குப் போனால் இன்டோர் நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீந்தி ரிலாக்ஸ் செய்வது பிடித்தமான செயல் என்கிறார் த்ரிஷா.
காபி, டீயை பக்கத்தில் கூட வரவிடுவதில்லையாம் அதேசமயம் ஒருநாளைக்கு நான்கைந்து தடவையாவது கிரீன் குடித்து உடம்பை லேசாக்கிவிடுவாராம். அதைத்தவிர பவர்யோகா செய்து மனதையும், உடலையும் இளமையாக வைத்திருக்கிறார் ஒல்லி இடுப்பழகி த்ரிஷா.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply