மட்டன் ரோகன் ஜோஷ்

Loading...

மட்டன் ரோகன் ஜோஷ்மட்டன் – கால் கிலோ
வெங்காயம் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தக்காளி ப்யூரி – அரை கப்
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள், சீரகத் தூள் – தலா ஒரு தேக்கரண்டி
தாளிக்க
பட்டை, பிரிஞ்சியிலை, ஏலக்காய், லவங்கம் – தலா 2
எண்ணெய் – 75 மில்லி

குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

மட்டன் சேர்த்து வதக்கி விட்டு வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 7 முதல் 8 விசில் வரும் வரை வேக விடவும்.

மட்டன் வெந்ததும் திறந்து அதில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

அதனுடன் தக்காளி ப்யூரியை சேர்த்து கொதிக்க விடவும்.

எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்து வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply