மஞ்சள் பூசணி சூப்

Loading...

மஞ்சள் பூசணி சூப்தேவையான பொருட்கள் :

பரங்கிக்காய் – 1 கப் (சின்னச் சின்னதாக சதுரங்களாக வெட்டியது),
சின்னதாக நறுக்கிய வெங்காயம் – 2,
வெங்காயத் தாள் – 1 கட்டு,
கேரட் – 1,
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
கருப்பு மிளகு – ருசிக்கு,
உப்பு, தண்ணீர் – தேவைக்கு.

செய்முறை :

• வெங்காயத்தாள், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் வெண்ணெயையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

• அதில் பரங்கிக்காய், கேரட், சிறிது வெங்காயத் தாள் சேர்த்து வதக்கவும்.

• இத்துடன் உப்பு, தண்ணீரும் சேர்க்கவும்.

• இதனை ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்கு மசிக்கவும்.

• சாப்பிடும் போது சற்று கொதிக்க வைத்து மிளகு மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து அலங்கரித்து பருகவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply