மசாலா பிரஞ்சு டோஸ்ட்

Loading...

மசாலா பிரஞ்சு டோஸ்ட்கோதுமை பிரட் – 4 துண்டுகள்
முட்டை – 2
பால் – 1/4 கப்
சிவப்பு மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு மற்றும் மிளகு தூள் – ருசிக்கு

மசாலாவுக்கு தேவையான பொருட்கள் :

தக்காளி – 1 சிறியது
வெங்காயம் – 1 சிறியது
பச்சை மிளகாய் – 1
சாட் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை :

• தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு கிண்ணத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

• பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

• ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிகப்பு மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் பட்டரை போடவும். ஒரு பிரட் துண்டை எடுத்து அதை முட்டை கலவையில் நன்றாக முக்கி எடுத்து தோசை கல்லில் போட்டு இருபக்கமும் நன்றாக சிவக்க டோஸ்ட் செய்யவும்.

• அனைத்து பிரட் துண்டுகளையும் இவ்வாறு செய்து ஒரு தட்டில் வைக்கவும்.

• ஒவ்வொரு பிரட் துண்டின் மேலும் சிறிது வெங்காய கலவையை வைக்கவும்.

• கடைசியாக அதன் மேல் கொத்தமல்லி தழை, சாட் மசாலாவை தூவி பரிமாறவும்.

• சுவையான சத்தான மசாலா பிரஞ்சு டோஸ்ட் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply