ப்ளாக்கர்களுக்கு கூகுள் தரும் அதிர்ச்சி உங்கள் ப்ளாக் அட்ரஸ் கேட்காமலே மாற்றப்படும் அபாயம்

Loading...

ப்ளாக்கர்களுக்கு கூகுள் தரும் அதிர்ச்சிதமிழ் ப்ளாக்கர்கள் கூகிளின் ப்ளாக்ஸ்பாட் அல்லது வர்ட்ப்ரஸ் பளாக் இலவச மென்பொருட்களையே தங்கள் ப்ளாக் பதிவுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூகுள் கம்பெனியின் ப்ளாக்கர் ப்ளாக்குகளே வர்ட்ப்ரஸ்சை காட்டிலும் தமிழ் ப்ளாக்கர்கள் மத்தியில் அதிக பிரபலம். ஆனால் இப்போது கூகுள் ப்ளாக்கர்களுக்கு ஒரு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஆமாம், உங்கள் ப்ளாக் முகவரியை உங்களை கேட்காமலேயே மாற்றியுள்ளது கூகுள். எத்தனை லிங்குகள் நண்பர்களுக்கு கொடுத்திருப்பீற்கள். எத்தனை ஃபேஸ்புக் ஷேர்களை இந்த முகவரி வைத்து செய்திருப்பீர்கள். எத்தனை நண்பர்களுக்கு இந்த முகவரிகளை மெயில் மூலம் அனுப்பி வைத்திருப்பீர்கள். ஆனால் அது எல்லாவற்றையும் கூகுள் தன்னுடைய தன்னிச்சையான செயலின் மூலம் மாற்றி விட்டது. ஆமாம் , உங்கள் ப்ளாக் முகவரி

www.moonramkonam.blogspot.com என்று வைத்துக் கொள்வோம். இப்போது அது உங்களை கேட்காமலேயே www.moonramkonam.blogspot.in என மாற்றப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் உங்கள் ப்ளாக்குக்கே ஒரு முறை போய் அட்ரஸ் பாரில் என்ன தெரிகிறது என்று பாருங்கள் … உங்கள் ப்ளாக் blogspot.in என்றே தெரியும்.

அதாவது இந்திய ப்ளாக்கர்களை தனித்துக் காட்டவே கூகுள் இந்த செயலை செய்துள்ளது. இதில் என்ன ஆபத்துக்கள்?

தற்போது கொஞ்ச நாளைக்கு ( எத்தனை என்பது கூகுளுக்கே வெளிச்சம் ) உங்கள் ப்ளாக் முகவரி நீங்கள் .in அல்லம் .com என எதை டைப் செய்தாலும் வரும். ஆனால் கொஞ்ச நாளைக்குப் பிறகு blogspot.com என்ற முகவரி வேறு நாட்டை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படலாம். இது பெரிய ஆபத்தல்லவா. அப்போது உங்கள் லிங்குகள் எல்லாம் என்னாவது.

கூகுள் அளிக்கும் விளக்கம்:

கூகுள் அந்தந்த நாட்டை சேர்ந்தவர் பார்க்க அந்தந்த நாட்டு சர்வர் மூலம் வேகமாக அளிக்கிறோம் (க்ளைவுட் சர்வர் ஹோஸ்டிங்க் ) என இப்போதைக்கு சப்பை கட்டு கட்டினாலும் , இது வியாபார ரீதியாக செய்யப்பட்ட ஒரு முடிவாகவே பார்க்கப்படுகிறது. இதன்மூலம் டொமைன் பெயர்களை விற்கும் தன் கிளையின் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளவே இதனை கூகுள் செய்துள்ளது. சரி, இதிலிருந்து தப்பிப்பது எப்படி? வேறு வழியில்லை, கூடிய விரவில் டொமைன் பெயர் வாங்குவது தான். வேறென்ன?

எல்லமே கடைசியில் வியாபாரத்தில் தான் முடிகிறது. கூகுள் வழங்கிய இலவச ப்ளாக்கர் சர்வீசும் இதற்கு விதிவிலக்கல்ல !

கூகுள் கம்பெனிக்கு எமது கோரிக்கை : பலர் தங்கள் ப்ளாக்கை உயிருக்கு உயிராய் நேசிக்கிறார்கள். அவர்களை கேட்காமல் தயவு செய்து blogspot.com என்ற முகவரியை வேறு யாருக்கு தாரை வார்த்து விடாதீர்கள் !

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply