பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

Loading...

பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!பொதுவாகவே பெண்கள், ஆண்கள் என பொடுகு பிரச்னைகளில் அவதிப்படுபவர்கள் ஏராளம்.
இதனால் தலைமுடி அதிகம் உதிரும், இதற்கு தலையில் ஈரப்பசை இல்லாததே காரணம்.

* ஒரு ஸ்பூன் கற்பூரவள்ளி எண்ணெயுடன் 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து ஸ்கால்பில் தடவி 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும், பிறகு ஷாம்பூ அல்லது சிகைக்காய் கொண்டு குளித்தால் பொடுகு நீங்கும்.

* இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கால்பில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

* தினமும் இரவில் தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை போட்டு ஊறவைத்து, அதனை தேய்த்து வந்தாலும் பொடுகு நீங்கும்.

* தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் தயிர் மூன்றையும் சரிசம அளவில் கலந்து கொண்டு கூந்தலில் தேய்த்து மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலசவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply