பேஸ்புக் பாவனையின் போது அவதானம் தேவை

Loading...

பேஸ்புக் பாவனையின் போது அவதானம் தேவைபொதுமக்கள் இணையத்தினூடாக தமது தகவல்களை பகிர்வது தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக பெண்கள் இணையத்தில் தமது படங்களை பகிரும்போது மிகவும் கவனத்துடன் செயற்படுமாறு ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மூலம் எழும் சிக்கல்கள் தொடர்பில் கவனத்துடன் செயற்படுமாறு பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் சமூக வலைத்தளமான பேஸ்புக் முலம் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply