பேஸ்புக் தந்தை மகளுக்கு எழுதிய கடிதம்

Loading...

பேஸ்புக் தந்தை மகளுக்கு எழுதிய கடிதம்உலக புகழ் பெற்ற பேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் செயல் அதிகாரி மார்க் ஷுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான். இவர் கர்ப்பமாக இருந்தார்.
அவருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மஸிமா என பெயர் சூட்டியுள்ளனர்.

இத் தகவலை ஷுகர் பெர்கரும் அவரது மனைவி பிரிசில்லாவும் பேஸ்புக்கில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் இருவரும் இணைந்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் தங்களது வாழ்நாளில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான 99 சதவித கம்பெனிகள் பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கு, சுகாதாரமான வாழ்க்கைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஷுகர்பெர்க் தனது மகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மகள் மஸிமா மற்றும் பிற குழந்தைகளுக்காக சிறந்த உலகை உருவாக்க தனது செல்வம் முழுவதையும் தருவதாக உறுதி அளித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply