பேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்

Loading...

பேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்இளைஞர்களின் இப்போதைய மிக அவசரமான வேலை என்று பார்த்தால் ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். லைவ் சாட்டிங்கில் இவை இரண்டும் தான் இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையானவை. ஆனால் வீடியோ வசதிகளில் ஃபேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி வாட்ஸ் அப் முன்னிலை வகிக்கிறது. 2004இல் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் இளைஞர்களின் இந்திரபுரியாக இருந்து வந்தது. இதன் மூலம் தொலைந்தவர்களைக் கூட கண்டுபிடிக்கலாம் என்ற அளவில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனாலும் வீடியோக்களுக்கு அவ்வளவு எளிதான வாய்ப்புகள் இதில் இல்லை. அதற்குப் பின் சமீபத்தில் சந்தைக்கு வந்த வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தனிநபர் சாட்டிங்கில் ஆரம்பித்து, இன்று குழு சாட்டிங் வரை வளர்ந்துள்ள வாட்ஸ் அப், வேகமான வீடியோ மற்றும் புகைப்பட பகிர்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ பகர்தலில் ஃபேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply