பேபி கார்ன் மசாலா

Loading...

பேபி கார்ன் மசாலாபேபி கார்ன் – கால் கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
ப்ரஷ் க்ரீம் – ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – சிறிது
தாளிக்க:
பட்டை
கிராம்பு
பிரிஞ்சி இலை

வாணலியில் வெண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி விடவும்.

பிறகு அதில் கார்ன் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

கார்ன் வெந்து தண்ணீர் வற்றியதும் அதில் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான பேபி கார்ன் மசாலா தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply