பெப்பர் ரோபோவுடன் செக்ஸ் கூடாது: தயாரிப்பு நிறுவனம்

Loading...

பெப்பர் ரோபோவுடன் செக்ஸ் கூடாது தயாரிப்பு நிறுவனம்ஜப்பானின் ‘சாப்ட்பேங்க்’ நிறுவனம் ‘பெப்பர்’ என்று பெயரிடப்பட்டு உள்ள ரோபோக்களை தயாரித்து வருகிறது. 120 செ.மீ. உயரம் உள்ள இந்த நகரும் ரோபோக்கள், ஆண்ட்ராய்டு வசதி கொண்டதாகும். பேசும் திறனுடன், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வசதியும் இவைகளுக்கு உண்டு. சுமார் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் இந்த ரோபோக்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த ரோபோக்கள் குறித்து கடந்த ஜூன் மாதம், முதன் முதலாக அறிவிப்பு வெளியானபோது, ஒரு நிமிடத்துக்குள் 1000 ரோபோக்கள் ஆன்-லைன் மூலம் விற்பனையாகின. இந்த ரோபோக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘சாப்ட்பேங்க்’ நிறுவனம் கண்டிப்பான கட்டளை ஒன்றை போட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இந்த ரோபோவுடன் உடல் ரீதியான தொடர்பு (செக்ஸ்) அல்லது அதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதுதான் அந்த கட்டளை. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால் மட்டுமே இந்த ரோபோக்களை வாங்க முடியும். அதையும் மீறி இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என ‘சாப்ட்பேங்க்’ அறிவித்து உள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply