பெண்கள் ஸ்லிம்மா, அழகா இருப்பது எப்படி?

Loading...

பெண்கள் ஸ்லிம்மா, அழகா இருப்பது எப்படிஅழகை பாதுக்காக பெண்கள் படாதபாடு படுகிறார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண்களுமே அழகு தான். இந்நிலையில் ஆண்டவன் கொடுத்த அழகை பாதுகாக்க, மேம்படுத்த பெண்கள் என்னவெல்லாமோ செய்கிறார்கள்.
கருப்பும் ஓர் அழகு தான் என்பதை மறந்துவிட்டு சிவப்பாக ஆக கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இயற்கை முறையில் அழகை பாதுகாப்பது எப்படி என்று இங்கே நண்பன் தமிழில் பார்ப்போம்
சத்தான உணவு
நான் மாடர்ன் பொண்ணு என்று பீட்சா, பர்கர், பாஸ்தா என்று சாப்பிட்டு குண்டாக ஆக வேண்டாம். ஸ்லிம்மாகுகிறேன் என்ற பெயரில் பட்டினியும் கிடக்க வேண்டாம். மாறாக சத்தான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட்டாலே நீங்கள் ஸ்லிம்மாகவும், ஃபிட்டாகவும் இருக்கலாம்.
உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
தண்ணீர்
தினமும் குறைந்தது 20 முதல் 25 டம்ப்ளர் வரை தண்ணீர் குடியுங்கள்.

நல்ல தூக்கம்
இரவில் நன்றாக தூங்குவது உங்கள் அழகை பாதுகாக்க மிகவும் முக்கியம். சரியான தூக்கம் இல்லை என்றால் முகம் வாடி, கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும். அதன் பிறகு அதுக்கு வேறு தனியாக கிரீம்கள் போடுவீர்கள்.
கடலை மாவு
வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை ஹெர்பல் ஃபேஸ்வாஷ் அல்லது கடலை மாவால் கழுவவும். கடலை மாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்தும் கழுவலாம் அல்லது வெறுமனே முகத்தில் தடவியும் கழுவலாம்.
வீட்டு வேலைகளை நீங்களே செய்யலாமே
வீட்டு வேலைகளை செய்வது நம் உடல் நலத்திற்கு தான் நல்லது. அதை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு நம் உடல் நலத்தை நாமே கெடுப்பானேன்.
தேன், பாலாடை
முகம் பளப்பளப்பாக தேன் அல்லது பாலாடையை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply