பெண்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் சிறுநீர் கசிய என்ன காரணம்?

Loading...

பெண்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் சிறுநீர் கசிய என்ன காரணம்பெண்களின் இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் சிறுநீர் குழாயினையும், சிறுநீர் பாதையினையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அடித்தள தசைகள் Urethra என்கிற சிறுநீர் குழாயினை வலுவாக, மிக சரியாக தாங்கிப் பிடித்து வைத்திருக்கும்.

சில பெண்களுக்கு இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் தளர்ச்சியோ, பலவீனமோ அடைகின்ற பொழுது பெண்களுக்கு இருமினால், பலமான பொருட்களை தூக்கினால், சிரித்தால் அவர்களையும் அறியாமல் சிறுநீர் கசிந்துவிடும். ஆக கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கசிவிற்கு முதல் காரணமாக இருப்பது தசைகளின் தளர்ச்சியே.

அடுத்து-சிறுநீர் (Urethra) குழாயினை Spinchter என்கிற தசைகள் பாது- காப்புடன் சிறுநீரை நாமாக வெளியேற்றும் வரையில் இறுக்கமாக மூடியே வைத்திருக்கும். நாம் சிறுநீர் போகும்போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீரை வெளியேற்றும். ஆனால் இந்த Spinchter தசைகள் சில பெண்மணிக்கு ஒழுங்காக, முறையாக செயல்படாமல் போகும். இதனால்கூட கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கசியலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply