புண், இரத்த பேதியை கட்டுப்படுத்தும் உதிரமரம்

Loading...

புண், இரத்த பேதியை கட்டுப்படுத்தும் உதிரமரம்தாவரவியல் பெயர் : Lannea coromandelica சிறு கிளைகளில் நுனியில் கொத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலையுதிர் மரம். இதற்கு ஒதியமரம என்றும் வழங்கப் பெறும். இலை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
தாது பலம் கொடுக்கவும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும், இரத்தக் கசிவை நிறுத்தவும், உடல் தாதுக்கள் அழுகுவதைத் தடுக்கவும் மருந்தாகப் பயன்படுகிறது.
1. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களுக்கு கட்ட கரைந்து விடும்.
2. இலையை அரைத்துப் பற்றிட எவ்விதப் புண் புரைகளும் தீரும். ஒதியம் பட்டையை நீரிளிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் ஆறாத புண்கள், ஆசன வாயில் காணும் புண்கள், பிறப்புறுப்பில் உள்ள ரணங்கள் ஆகியவற்றைக் கழுவி வரக் குணமாகும். வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் இரத்தம், சீழ் கசிதல் குணமாகும். 25 மி.லி. ஆகக் குடித்து வர அக உறுப்புகளில் உள்ள புண்கள், பெரும்பாடு, இரத்த மூலம் ஆகியவை குணமாகும்.
3. 20 கிராம் பட்டையுடன் 5 கிராம் மஞ்சள் சேர்த்து மையாக அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து வடிகட்டிக் காலை, மாலை சாப்பிட மூலக் கடுப்பு, இரத்த பேதி, நீர்த்த பேதி, தாகம், மயக்கம், பெரும்பாடு ஆகியவை தீரும்.
4. ஒதியம் பிசின் 100 கிராம் பொடி செய்து அத்துடன் 5 கிராம் கிராம்புப் பொடி கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டிப் பொடியைத் தேனில் குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வர இரைப்பிருமல் தீரும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply