பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்

Loading...

பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்தேவையான பொருட்கள் :

பீர்க்கங்காய் தோல் – 1 கப்
புதினா – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
தேங்காய் – 1 பத்தை
பெருங்காயம் – 1/2 தே.கரண்டி
புளி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
உப்பு – 3/4 தே.கரண்டி
எண்ணெய் – 1 தே.கரண்டி

தாளிக்க :

கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை :

• பீர்க்கங்காய் தோலை நன்றாக கழுவி வைக்கவும்.

• புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை வறுத்து தனியாக வைக்கவும்.

• அதே கடாயில் பீர்க்கங்காய் தோலினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும். பிறகு புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது நேரம் ஆறவைக்கவும்.

• ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய், புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அரைத்த பீர்க்கங்காய் கலவையில் கொட்டி நன்றாக கலக்கவும்.

• இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் புதினா துவையல் ரெடி. இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN