பீட்ரூட் பிரியாணி

Loading...

பீட்ரூட் பிரியாணிபாசுமதி அரிசி – 300 கிராம்
பீட்ரூட் – 2 மீடியம் சைஸ்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்ச மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1/2 தேகக்ரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, புதினா – சிறிது
பிரிஞ்சி இலை – 2
பட்டை, ஏலம் லவங்கம் தலா – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 11/2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு (ஒரு தேக்கரண்டி)
எண்ணை – 5 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – 1/2 தேக்கரண்டி
அலங்கரிக்க – அவித்த முட்டை

செய்முறை

1.அரிசியை பத்து நிமிடம் ஊறவைக்கவும். பீட்ரூட்டை தோல் சிவி மிடியமாக சின்ன சதுர வடிவமாக வெட்டி கொள்ளவும்.

2.வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்து வைத்து கொள்ளவும்.

3.குக்கரை காயவைத்து எண்ணை சேர்த்து அதில்பிரிஞ்சி இலை, பட்டை ஏலம் லவங்க சேர்த்து வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.வெங்காயம் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்ந்து இரண்டு நிமிடம் வதங்க விடவும்.
5.கொத்துமல்லி புதினா சேர்த்து வதக்கி தக்காளி மற்றும் பச்சமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க்கவும்.
6.அடுத்து வெட்டி வைத்துள்ள பீட்ரூட், மிளகாய் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு வதக்கி இரண்டு நிமிடம் வேக விடவும்.
7.வெந்ததும் 1: 11/2 அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு பாதி கொதித்து வரும் போது நெய் + லெமன் ஜூஸ் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு இரண்டு விசில் வந்ததும் இரக்கவும்.
8. பிரஷர் ரீலிஸ் ஆனதும் நன்கு பிரட்டி வேறு பாத்திரத்தில் மாற்றி விடவும்.

சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெடி ,ரெய்தா, பாயில்ட் எக், சிக்கன் பிரை , கட்லட் என பிடித்த பக்க உணவுடன் சாப்பிடலாம்.
லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசியான ரெசிபி.

ஹாக்கின்ஸ் ப்ரசர் குக்கர் என்பதால் 3 நிமிடத்தில் ப்ரஷர் ரீலிசாகிடும்.எனக்கு என் ஹஸுக்கு, என்பையனுக்கு எல்லாருக்குமே லன்ச் பாக்ஸ் ரெடி பண்ணுவதால் [பெரும்பாலும் வெஜ் தான் எடுத்து செல்வோம் .இப்படி வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு காய் அல்லது கீரையில் பிரியாணி செய்வதுண்டு.வேலையும் சுலபமாக முடிந்து விடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply