பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப்

பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப்பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட் கைபேசிகளில் குறுஞ்செய்தி சேவையின் ஜாம்பவனான வாட்ஸ் அப், 48 மணி நேரம் பிரேசிலில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பிரேசிலில் நடைபெற்று வந்த வழக்கு ஒன்றில், நீதிமன்ற உத்தரவுக்கு வாட்ஸ் அப் ஒத்துழைக்க மறுத்தது.

எனவே அதன் சேவையை 48 மணிநேரம் நிறுத்தி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து முடங்கிய சேவை, மீண்டும் தொடங்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதன் போட்டி நிறுவனம் ஒன்று, 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனாளர்களை கையாள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Loading...
Rates : 0
VTST BN