பால் குடிப்பது நல்லதா? கெட்டதா?

Loading...

பால் குடிப்பது நல்லதா  கெட்டதாபால் என்பது குழந்தைக்காக, தாயிடம் சுரக்கும் அற்புத உணவு. இளம் உயிருக்கேற்ற ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு சத்துக்களும், நிறைந்த உணவு.
பால் என்பது மருந்து என்பதை மறந்து, சத்து என்று நினைத்து, பலரும் குடித்துக் கொண்டிருக்கிறோம். பாலில் சுண்ணாம்புச்சத்து (கல்சியம்), புரதச்சத்து, பொட்டாசியம் நிறைய இருக்கிறது. ஒரு கப் பாலில் சுமார், 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

இது, எலும்புகளையும், பற்களையும் பாதுகாக்க உதவும் என்றுதான், பலரும் நம்புகிறோம். ஆனால், உண்மை இதற்கு மாறானது என்று, பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆய்வு நாளேடு ஒன்றில், இடுப்பு எலும்பு முறிவு, பால் பருகும் மக்களிடம் தான் அதிகம். பால் அதிகம் சாப்பிடாத மக்களிடம், இது குறைவு என்பதை நிரூபித்துள்ளது.

பாலில் கல்சியம் நிறைய இருந்தாலும், பாலின் அமிலத்தன்மையால் எலும்புகளில் இருக்கும் கல்சியம் உருகி, நீரில் வெளியேறுகிறது. ஆகவே, எலும்புகள் பலவீனமாகின்றன என்பதே, ஆய்வில் கிடைத்த முடிவாம்.

இரத்தசோகை, பலவகை அலர்ஜிகள், டைப் -1 சர்க்கரை நோய், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், பால் ஒவ்வாமை, ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பலவிதமான பிரச்னைகளுக்கு, பால் ஒரு காரணியாக இருக்கிறதாம்.

இதுதவிர, மாடுகள் சீக்கிரம் வளரவும், இறைச்சி தேவைக்காகவும், பால் சுரப்புக்கும், துரித வளர்ச்சி ஹோர்மோன் (Recombinant Bovine Growth Hormone & RBGH) ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மாடுகளுக்கு மூன்றாம் மாதத்திலிருந்தே, இதை போடுவதால், 15 மாதத்திலேயே அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கிறது. மாடுகளின் மாமிசத்திலும், இந்த ஹோர்மோன் கலந்திருப்பதால், இதை சாப்பிடும் மனிதர்களுக்கு, நிறைய பக்க விளைவுகள் வரலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

ஹோர்மோன் ஊசியின் விளைவால், ஊசி போடப்பட்ட மாடுகளின், பாலைக் குடிப்பதால் சர்க்கரை நோய், பெண்கள் சீக்கிரம் பூப்பெய்தல், அதீத மார்பக வளர்ச்சி, ஆண்களுக்கும் மார்பக வளர்ச்சி என்று, ஏகப்பட்ட பிரச்சினைகள் வரலாமாம்.

இப்படி பல தீமைகள் நிறைந்துள்ள பாலை, அதிகம் குடிப்பதற்கு பதிலாக, பாலில்லாத கஷாயம் தயாரித்து சாப்பிட்டால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply