பால் அல்வா

Loading...

பால் அல்வாஉடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரும், மிகுந்த சுவைமிக்க பால் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருள்கள்:

காய்ச்சிய பால் – 5 கப்
அஸ்கா சர்க்கரை – 1/4 கப்
எலுமிச்சம்பழச் சாறு – 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் – 1/4 கப்
சாரப்பருப்பு – 1 ஸ்பூன்
ஏலப்பொடி – 1/2 ஸ்பூன்
பன்னீர் – 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் – 6
செய்முறை:

* கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும்.

* பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.

* பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

* சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply