பார்லி பயறு பொங்கல்

Loading...

பார்லி பயறு பொங்கல்பார்லி – ஒரு கப்
பச்சை பயறு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
சீரகம்
மிளகு
எண்ணெய்
கறிவேப்பிலை
நறுக்கிய இஞ்சி

பார்லி மற்றும் பச்சைபயறை சுத்தம் செய்து தயாராக எடுத்து வைக்கவும்.

பார்லியை கழுவி அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பார்லி ஊறியதும் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பயிறை சேர்த்து உப்பு போட்டு 20 முதல் 30 நிமிடங்கள் குக்கரில் வேக வைக்கவும்.

ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து பொங்கலுடன் கொட்டவும்.

ஆரோக்கியமான பார்லி பொங்கல் தயார். இதற்கு எல்லாவித சட்னிகளும் பொருத்தமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply