பாதம் நகம் பராமரிப்பு

Loading...

பாதம் நகம் பராமரிப்புஅடுத்தவர் கண்களுக்கு அத்தனை எளிதில் தெரியாது என்பதால், பாத பராமரிப்பு பல பெண்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தவிர, பாதப் பிரச்னையில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தம் அதிகமாவதால் குதிகால் வெடிப்பு, பாதத்தில் வலி, குடைச்சல் ஏற்படும். தோல் வெடிப்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தோல் உரிந்துவரும். தோல் உரிவதால் வலி உண்டாகும். “உங்கள் கைக்கெட்டும் பொருட்களை வைத்தே இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்”
என்கிறார் சித்த மருத்துவர் பொன்.ராமச்சந்திரன்.

பாதம், நகம் பராமரிப்பு
மல்லி விதை (தனியா), சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் பொடிக்கவும். அந்தப் பொடியை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு தளதளவென கொதிக்கவைத்து இறக்கவும். கொஞ்சம் வெதுவெதுப்பாக ஆறியதும், அந்தத் தண்ணீரை தாம்பாளத்தில் ஊற்றி, 10 நிமிடம் பாதத்தை அதில் வைக்கவேண்டும். அல்லது மல்லி – சீரகப் பொடியை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டுவர, நாளடைவில் பாத வெடிப்பு காணாமல் போய்விடும். கால் ஆணியும் வராது. நகமும் நன்றாக வளரும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
சிலருக்கு கால் நகங்கள் சொத்தையாக இருக்கும். நக வெடிப்பு இருக்கும். கிருமித் தொற்று இருக்கும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் கால்சியம் குறைபாடுதான். இதை உணவுமுறையிலேயே எளிதில் குணப்படுத்த முடியும். வாரம் இரண்டு நாட்கள் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் கால்சியம் சத்துகளைப் பெறமுடியும். முருங்கை, பொன்னாங்கன்னி, அரைக்கீரை, தண்டுக்கீரைகளில் கால்சியம் அதிகம் இருக்கிறது.
நகக் கண்களை சுத்தமாக வைத்துக்கொள்வதும் சுலபம்தான். ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள், ஒரு கைப்பிடி குப்பை மேனி மற்றும் புதினாவை வெந்நீரில் வெதுவெதுப்பானதும் அதில் நகக் கண்கள் படுமாறு கால்களை வைக்க வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்துவந்தால் அழுக்கு நீங்கும், கிருமித் தொல்லை இருக்காது. சொத்தை வராது, நக வெடிப்புகள் மறைந்துபோகும். தோலும் பளபளக்கும். சோரியாஸிஸ், சேற்றுப்புண் இருந்தாலும் குணமாகும்; வராமலும் தடுக்கமுடியும்.
இதையெல்லாம்விட மிக எளிமையான வழி மருதாணி மருத்துவம்! அழகுக் குறிப்பில் மட்டுமல்ல ஆரோக்கிய குறிப்பிலும் மருதாணிக்கு முக்கிய இடம் உண்டு. பாதத்தைச் சுற்றி மருதாணி வைப்பதால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். நகக்கண்களில் வைத்தால் நகசொத்தையும் வராது. பாதத்தில் வெடிப்பு இருந்தால் ஆண்களும் மருதாணி வைக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply