பாதங்களின் அசைவில் இருந்து மின்வலு கண்டுபிடிப்பு

Loading...

பாதங்களின் அசைவில் இருந்து மின்வலு கண்டுபிடிப்புமனித பாதங்களின் அசைவில் உருவாகும் இயக்க சக்தியை பயன்படுத்தி எதிர்கால நகரங்களை ஒளியூட்டும் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் படிகளில் ஏறுகையிலும், கதவுகளைத் திறக்கையிலும் செலவிடப்படும் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது விஞ்ஞானிகளின் நோக்கமாகும்.
இந்தத் தொழில்நுட்பம் 1880ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டதாகும். இதற்காக, ஒருவகை பளிங்குகள் உபயோகிக்கப்பட்டன. இந்தப் பளிங்குகள் அழுத்தம் தொடுக்கப்படுகையில் மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடியவை.
இதனை நடைபாதைகளில் உபயோகிக்கும் பட்சத்தில் பெருமளவு மின் வலுவை பெற முடியும் என பேவ்ஜென் என்ற அமைப்பின் பிரதம நிறைவேற்றுனர் லோரன்ஸ் கெம்பல் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டன் மெட்ரோ ரயில் நிலையத்தின் படிகளில் நாளொன்றில் 15 மில்லியன் பாதங்கள் படுவதாக அவர் கூறினார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply