பாகற்காய் பொரியல்

Loading...

பாகற்காய் பொரியல்தேவையான பொருட்கள்

பாகற்காய் – 1/2 கிலோ
வெங்காயம் – 3
மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

பொடிப்பதற்கு:-

அரிசி – இரண்டு கைப்பிடி
மிளகாய் வத்தல் – 4
சோம்பு – 2 தேக்கரண்டி

தாளிப்பதற்கு:-

கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

• பாகற்காயை நன்கு கழுவிவிட்டு அரிந்து வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

• நறுக்கிய பாகற்காயில் மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மைக்ரோவேவ் ஹையில் பத்து நிமிடம் வைத்து எடுக்கவும். இடையில் ஒரு முறை வெளியில் எடுத்து நன்கு கிளறிவிட்டு வைக்கவும்.(எண்ணெய் குறைவாக பயன்படுத்துவதற்க்கும், ஈரபசையை போக்குவதற்க்கும் இம்முறையில் செய்வதுண்டு.)

• பொடிப்பதற்கு தேவையான பொருட்களை வெறும் வாணலியில் மிதமான தீயில் பொரியும் வரை வறுத்து எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

• ஒரு வாணலியில் தாளிப்பதற்கு தேவையான பொருட்களை கொண்டு தாளித்து விட்டு பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

• ஓரளவு வதங்கியதும் பாகற்காயை சேர்த்து நன்கு கிளறிவிட்டு உப்பு சரிப்பார்த்து சேர்த்து விட்டு குறைந்த தீயிலேயே நன்கு வதங்க விடவும்.

• நன்கு உதிரியாக பொலபொலவென்று ஆனதும் பொடியில் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

• தேங்காயோ, அதிக மசாலாவோ இல்லாத சத்தான பாகற்காய் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply