பளபள சருமத்துக்கு பப்பாளி!

Loading...

பளபள சருமத்துக்கு பப்பாளி!சருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி. சருமம் பொலிவாக, இளமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, பப்பாளி அருமருந்து.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி.
பப்பாளியுடன் சிறிது தேன் கலந்து தடவினால், சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.
பப்பாளியைக் கைகளால் நசுக்கி, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்; முகப்பருக்கள் மறையும்.
சருமத்தில் தொடர்ந்து தடவியும் உட்கொண்டும் வந்தால், சருமம் மென்மையாகும்.
சருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.
கரும்புள்ளிகளை நீக்குகிறது.
பப்பாளியை மசித்து, தலையில் பூசி், குளித்துவந்தால் முடி உறுதியடையும்; நன்கு வளரும்.
பாத வெடிப்புகளைப் போக்கவும் பப்பாளியை மசித்துப் பூசலாம்.
குறிப்பு: பப்பாளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம்தான் (Alpha hydroxy acid) ஆன்டிஏஜிங் பொருளாகச் செயல்படுகிறது. ஆனால், இந்த அமிலம்தான் பப்பாளியின் அமிலத்தன்மைக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, நீண்ட நேரம் இதை முகத்தில் பூசக் கூடாது. 5 முதல் 10 நிமிடங்களுக்குள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply