பலாக்காய் வறுவல்

Loading...

பலாக்காய் வறுவல்பலாக்காய் – ஒன்று
சின்ன வெங்காயம் – 10
தேங்காய் துருவல் – அரை கப்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க :
தனியா – 2 தேக்கரண்டி
சோம்பு – 3/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
தாளிக்க :
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
எண்ணெய்

சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.

பலாக்காயை சிறிய துண்டுகளாக்கி உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைக்கவும்.

வறுக்க கொடுத்தவற்றை வெறும் கடாயில் போட்டு வறுக்கவும்.

அதனுடன் கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.

வறுத்தவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

பலாக்காய் முக்கால்வாசி வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பிரட்டி மேலும் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

பின்னர் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து காயுடன் சேர்க்கவும்.

சுவையான பலாக்காய் வறுவல் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply