பன்றியின் கண்விழி வெண்படலத்தை மனிதனுக்கு பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை!

Loading...

பன்றியின் கண்விழி வெண்படலத்தை மனிதனுக்கு பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை!சீனாவில் பன்றியின் கண்விழி படலத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
வாங்ஸினி (60) என்ற முதியவருக்கு 10 செமீ தூரத்தி உள்ள அசையும் பொருட்களை மட்டுமே பார்க்க முடிந்தது, இதன் காரணமாக அவரது கண்பார்வைபறிபோகும் அபாயம் இருப்பதாக மருத்துவர்களை எச்சரித்திருந்தனர்.

ஆனால், கண்விழி வெண்படத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், ‘அகள்னியா’ என அழைக்கப்படும் பயோ என்ஜினீயரிங் கண்விழி வெண்படலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இத்தகைய தொழில் நுட்பம் வாய்ந்த விழி வெண்படல செல்கள் பன்றியிடம் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பன்றியின் விழிவெண்படலம் வாங்ஸினிக்கு பொருத்தப்பட்டது.

இந்த அறுவைசிகிக்சை கடந்த செப்டம்பரில் நடந்தது. தற்போது 3 மாதங்களுக்கு பிறகு அவருக்கு படிப்படியாக மீண்டும் கண்பார்வை கிடைத்தது.

இதனால் இந்த உறுப்பு மாற்று ஆபரேசன் வெற்றி பெற்றுள்ளதாக சீனாவின் ஷாங்டாங் கண் நிறுவன மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

சீனாவில் விழிவெண்படல நோயினால் ஏராளமானவர்களுக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆண்டுக்கு 1 லட்சம் பேரை இந்நோய் தாக்குகிறது.

தற்போது இந்த அறுவை சிகிச்சையின் மூலம் ஏராளமானவர்கள் பயன்பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply