நோயெதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள்!

Loading...

நோயெதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள்!நாம் தினமும் உண்ணும் உணவு தான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது.
அவ்வாறு அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை தெரிவு செய்து சாப்பிடுங்கள்.

இஞ்சி

இஞ்சி வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்.

இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம். தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

பாதாம்

இதில் விட்டமின் இ, இரும்புசத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.

கீரை

அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், விட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

பேரீச்சம்பழம்

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.

கேரட்

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள விட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply