நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கும் வகையில் புதிய அதிநவீன பேஸ்மேக்கர் உருவாக்கம்

Loading...

நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கும் வகையில் புதிய அதிநவீன பேஸ்மேக்கர் உருவாக்கம்கடந்த 1950-ம் ஆண்டுகளிலிருந்து, இதயம் செயலிழந்துள்ள நோயாளிகளுக்கு “பேஸ்மேக்கர்”(Pacemaker) எனப்படும் செயற்கை மாற்று சாதனத்தை பொருத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த பேஸ்மேக்கர் இதயப்பகுதிக்கு சற்று மேலே வைக்கப்பட்டு அதிலிருக்கும் நுண்ணிய கம்பிகள் மூலம் இதயத்துடன் இணைக்கப்படும்.
அதன்பின்னர் பேஸ்மேக்கரிலிருந்து வெளியாகும் சிறிய அளவிலான மின்சாரம் கம்பிகள் வழியாக பாய்ந்து சென்று செயலிழந்து இருக்கும் இதயத்தை துடிக்க வைக்கும்.
இதுபோன்ற பேஸ்மேக்கரை உபயோகப்படுத்தும் நோயாளிகளின் வாழ்நாட்களும் குறைவாக இருந்து வருகிறது.
அத்துடன், இந்த செயற்கை பேஸ்மேக்கரை பொருத்தும் இடத்தில் ரத்த கசிவு மற்றும் வலிகள் ஏற்படுவதாக நோயாளிகளிடமிருந்து புகார்கள் வந்துள்ளது.
இந்நிலையில், இந்த குறையை தீர்க்கும் வகையில், கனடாவில் உள்ல கல்கேரி மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் அதிநவீன பேஸ்மேக்கர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
தற்போது புழக்கத்தில் உள்ள பேஸ்மேக்கரை விட அளவில் மிக சிறிய அளவில் அதாவது, ஒரு பேனா மூடியின் அளவு மட்டுமே இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய பேஸ்மேக்கரில் இருப்பது போன்று இந்த புதிய சாதனத்தில் கம்பிகள் கிடையாது.
அதுமட்டுமல்லாமல், இந்த பேஸ்மேக்கரை இதயத்தின் மேல் புறத்தில் வைக்கப்படுவதற்கு பதிலாக நேரடியாக இதயத்திற்குள்ளேயே வைக்கப்படும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
இதய நோயாளிகளுக்கு பலன் அளிக்கும் வகையில், இந்த புதிய பேஸ்மேக்கர் சுமார் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்பட்டு நோயாளிகளின் வாழ்நாட்களை அதிகரிக்கும் என அதனை உருவாக்கிய மருத்துவரான டெரெக் எக்ஸனர் தெரிவித்துள்ளார்.
* மருத்துவர் மேலும் கூறுகையில் :
”தற்போது இந்த புதிய பேஸ்மேக்கரை சுமார் 600 நோயாளிகளுக்கு பொருத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ஒன்றுக்கூட எதிர்மறையாக செயல்படாமல் நல்ல பலனை அளித்து வருகின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
அத்துடன், கனடிய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக இந்த புதிய பேஸ்மேக்கரை அனுப்பியுள்ளோம்.
அரசு அனுமதி கிடைத்ததும் வெளிச்சந்தைக்கு வரும்.”
இவ்வாறு டெரெக் எக்ஸனர் தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply