நெத்திலி வறுவல்

Loading...

நெத்திலி வறுவல்நெத்திலி கருவாடு – அரைக் கிலோ
பெரிய வெங்காயம் – 3
பெரிய தக்காளி – 2
குழம்பு மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
தனி மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கருவாடின் தலை மற்றும் வால் பகுதியை எடுத்து விடவும். பின்னர் வெந்நீரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

பிறகு அதில் வேறு தண்ணீர் ஊற்றி 5 அல்லது 6 முறை நன்கு அலசவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் சுத்தம் செய்த கருவாடு சேர்த்து 2 நிமிடம் பிரட்டவும்.

அதன் பிறகு அதில் தூள் வகைகளை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் வேக விடவும்.

கருவாடு நன்கு வெந்து அதில் உள்ள ஈரத்தன்மை குறைந்ததும் இறக்கவும்.

சுவையான நெத்திலி வறுவல் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply