நீர்க்கடுப்பை கட்டுப்படுத்தும் எலிக்காதிலை

Loading...

நீர்க்கடுப்பை கட்டுப்படுத்தும் எலிக்காதிலைதாவரவியல் பெயர் : Merremia emarginata Burn
ஏறத்தாழ இதய வடிவ மெல்லிய இலைகளைக் கொண்ட தரையோடு நீண்டு வளரும் கொடி. இலையே மருத்துவப் பயனுடையது. சிறுநீரைப் பெருக்கித் தாதுக் கொதிப்பைத் தணிக்கும் குணமுடையது.
1. ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக அரிந்து போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 150 மி.லி. யாகக் நாளைக்கு மூன்று வேளை, மூன்று நாட்களுக்கு சாப்பிட மேகச் சுரம், தாகம், நீரிழிவு, நீர்க் கடுப்பு, மூர்ச்சை, வலி ஆகியவை தீரும்.
2. உடம்பில் முள், ஊசி ஏதும் குத்தி வெளிப்படாமல் இருந்தால் அவ்விடத்தில் இலையை அரைத்துக் கட்ட வெளிப்படும்.
3. எலிக் காதிலையை அரைத்து வெட்டுக் காயத்தில் வைத்துக் கட்ட சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply