நீண்ட ஆயுளை தரும் மருத்துவ தொழில்நுட்பம்

Loading...

நீண்ட ஆயுளை தரும் மருத்துவ தொழில்நுட்பம்நீண்டகாலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஆனால் இதற்கு தேவையான உணவு, காற்று நீர், சுற்றுப்புறம் என அனைத்தும் மாசுபட்டு கிடக்கிறது. இதனால் மனித வாழ்க்கையின் ஆயுள் எண்ணப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மனித வாழ்நாளை தள்ளிப்போட தற்போது நவீன மருத்துவமுறைகள் வந்து விட்டன.

இந்த வகையில் ஒரு மனிதனுக்கு தேவையான மாற்று உடல் உறுப்புகளை தானமாக பெற்று பொருத்தி விடலாம். இந்த உறுப்புகள் தொடர்ந்து செயல்படுமா? என்றால் சந்தேகம் தான். ஏனென்றால் வேறு நபரிடம் வாங்கிய மாற்று உடல் உறுப்பு ஏற்கனவே பல ஆண்டுகள் செயல்பட்டது என்பதால் அதன் செயல் திறன் குறைந்து இருக்கும். இப்படி குறையுள்ள, தேய்மானம் அடைந்த உடல் உறுப்புகளைத்தான் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதை மாற்ற முடியாதா? என்பதற்கு விடை கிடைக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘எம்பிரியோ ஸ்டெம்செல்’ என்று பெயர். இந்த தொழில்நுட்பம் மூலம் புத்தம் புதிதாக தேய்மானமற்ற புதிய உடல் உறுப்புகளை உருவாக்க முடியும். அத்தனை உறுப்புகளுமே எந்த குறையும் இல்லாமல் இருக்கும். 50 வயதுடைய ஒருவருக்கு இந்த தொழில்நுட்பத்தில் உருவான இதயம் பொருத்தப்பட்டால், அந்த நபர் மேலும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்வார்.

இப்படியே கண், காது, மூக்கு, நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளை பொருத்திக் கொண்டே போனால் அவரது வாழ்நாளும் நீண்டு கொண்டே போகும். இந்த முறையில் மனிதனின் வாழ்நாளை 1,500 ஆண்டுகள் வரை கூட தள்ளிப் போடலாம். என்கிறார்கள், மரபணு தொழில்நுட்ப வல்லுனர்கள். இந்த தொழில்நுட்பம் மூலம் நமக்கு வேண்டிய உடல் உறுப்புகளை நம்மால் உருவாக்க முடியும். கலிபோர்னியாவில் உள்ள சேமோர் பென்சர் என்ற ஆய்வகத்தில் இதற்கான ஆராய்ச்சி நடந்தது. அதேநேரத்தில் இங்கிலாந்தில் ஜோனாதன் ஸ்லாக் என்ற விஞ்ஞானி தலையில்லாத தவளைகளை உருவாக்கி இருக்கிறார்.

இவரே பின்னாளில் இப்படி தலையில்லா மனிதர்களை உருவாக்க முடியும் என்கிறார். எதற்கு தலையில்லாத மனிதர்கள் என்று கேட்டால், மனிதனுக்கு தேவைப்படும் உடல் உறுப்புகளை இந்த தலையில்லாத மனிதர்களிடம் இருந்து எடுத்து பொருத்திக் கொள்ளலாம் என்று பதில் தெரிவிக்கப்பட்டது. வின்கான்கின் பல்கலைக்கழக டாக்டர் ஜேம்ஸ் தாம்சன் ‘ஸ்டெம்செல்’ என்ற ஆராய்ச்சியை தொடங்கினார். இதன்படி பெண்ணின் கருமுட்டையில் உள்ள நியூக்ளியஸ் என்ற உட்கருவை நீக்கிவிட்டு, ஆணின் உயிரணுவில் உள்ள செல்லின் உட்கருவுடன் இணைத்து கரு உருவாக்கப்படுகிறது.

கருத்தரித்த 8 வாரங்களில் ‘எம்பிரியோ’ என்ற வளர்ச்சி நிலை உருவானதும், அந்த வளர்ந்த கருவில் இருந்து நமக்குத் தேவையான மரபணுச் செல்களுடன் சேர்த்து சில குறிப்பிட்ட செல்களை பிரித்து அவற்றின் வளர்ச்சிப்பாதையை மாற்றி அமைத்து, நமக்கு தேவையான செல்களையோ அல்லது சிறுநீரகம், இதயம் போன்றவற்றையோ உருவாக்குவது தான் ‘ஸ்டெம்செல்’ ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். இதன்மூலம் தேவையான உறுப்புகளை புதிதாக உருவாக்கிப் பெற முடியும். இந்த மருத்துவ வளர்ச்சியின் மூலம் மனிதன் 200 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று நம்பப்படுகிறது. இது இன்னமும் நீண்டு கொண்டே போகும் என்கிறது, மருத்துவ ஆராய்ச்சி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply