நாய்களோடு விளையாடும் குழந்தைகள் பயப்படமாட்டார்கள்! ஆய்வில் தகவல்

Loading...

நாய்களோடு விளையாடும் குழந்தைகள் பயப்படமாட்டார்கள்! ஆய்வில் தகவல்குழந்தைகளுக்கு ஏற்படும் பதட்டத்தை குறைக்க நாய்கள் தான் மருந்து என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சிறு வயது குழந்தைகளுக்கு பெரியவர்களிடம் பேசவும், பழகவும் தயக்கமோ அல்லது பயமோ ஏற்படும்.

இந்த பயத்தை குறைப்பதற்கான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஈடுபட்டது.

ஆறு முதல் ஏழு வயதுள்ள அறுநூற்று நாற்பத்து மூன்று குழந்தைகளின் உடல் நலம், தினசரி பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இவர்களில் சுமார் ஐம்பத்தெட்டு சதவிகிதம் குழந்தைகள் தமது இல்லங்களில் நாய் வளர்த்து வந்தனர். நாய் வளர்க்கும் குழந்தைகளில் பன்னிரண்டு சதவிகிதம் பேரும், நாய் இல்லாத குழந்தைகளில் இருபத்தோரு சதவிகிதம் பேரும் பதட்டப்படுவது தெரியவந்துள்ளது.

குறும்பு செய்யும் நாயுடன் வளரும் குழந்தைகள் அதனுடன் விளையாடுவதாலும், பேசுவதாலும் மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை என்றும் பிறருடன் பேசுவதில் பயப்படுவதில்லை எனவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply