நமக்கேற்ற செயலியை தேடிக்கொள்ள இதோ புது வசதி

Loading...

நமக்கேற்ற செயலியை தேடிக்கொள்ள இதோ புது வசதிஐபோன், ஐபேட் உள்ளிட்டவைகளுக்கான செயலிகளை தேடி அதிருப்தி அடைந்த பயனாளிகளுக்காக அறிமுகமாகி இருக்கிறது புது தளம்.
ஆண்ட்ராய்டு புதிய செயலிகளை கண்டறிய வேண்டும் எனில் பயனாளிகள் கூகுள் பிளேஸ்டோரில் தேட வேண்டும், அதே போல ஐபோன் அல்லது ஐபேட் எனில் ஆப்ஸ்டோரில் தேடிக்கொள்ளலாம்.

ஆனால், இந்த தேடல் வசதி குறித்து பல பயனாளிகலும் அதிருப்தியையே வெளிப்படுத்தி வந்துள்ளனர். காரணம் என்னவெனில் ஆப்ஸ்டோரில் நமக்கு ஏற்ற செயலியை தேடுவது என்பது அத்துணை எளிதானதல்ல என்ற சிந்தனையே.

இந்த குறையை நீக்கும் வகையில் தற்போது அறிமுகமாகியுள்ளது ஆப்ஆப்.இயோ (https://appapp.io/us)

இந்த வசதியை பயன்படுத்தி பயனாளிகள் தங்கள் எதிர்பார்க்கும் செயலிகளை எளிதாக தேடிக்கொள்ளலாம், மட்டுமின்றி இதில் பரிந்துரைக்கப்படும் செயலிகளையும் பல்வேறு தலைப்புகளில் பயனாளர்களால் பார்க்க முடியும்.

விளம்பர தொல்லைகள் மிகுந்த செயலிகளை தவிர்த்து, நமக்கேற்ற செயலிகளை தேடிக்கொள்ளலாம் என் உறுதி அளிக்கிறது இந்தத் தளம்.

இதில் சுவாரசியம் என்னவெனில், இந்த தளத்தை உருவாக்கியவர், தனது மகளுக்காக கணிதம் சார்ந்த நல்ல செயலிகளை எளிதாக தேட முடியாமல் வெறுத்துப்போன பின்னர்,

தன்னைப் போன்றவர்களுக்காக இந்த தளத்தை ஐபோன் செயலிகளுக்கான தேடியந்திரமாக உருவாக்கியிருக்கிறார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply