தோல்பிரச்சனைகளுக்கு மருந்தாகும் உணவுகள்

Loading...

தோல்பிரச்சனைகளுக்கு மருந்தாகும் உணவுகள்சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம்.
தேமல் போன்ற பிரச்சனைகளுக்கு விட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தோல் பகுதியிலும் தடவலாம். விட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். விட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்சனைகள் உண்டாகிறது.

உணவில் ரவை, சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது.

ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இது போன்ற பிரச்சனைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பால் எடுத்துக்கொள்ளலாம்.

வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய், புரூட் கேசரி,பிரெட் சப்பாத்தி,அரைக்கீரை கூட்டு ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

விட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply