தேங்காய் பிஸ்கட்

Loading...

தேங்காய் பிஸ்கட்தேவையான பொருட்கள் :

மைதா – 250 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
தேங்காய் – 1
பால் – 50 மி.லி.
கசகசா – 1 தேக்கரண்டி
ஏலம் – 6
நெய் – 6 தேக்கரண்டி
எண்ணெய் – 100 மி.லி.

செய்முறை :

முதலில் பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும்.

நன்றாக கொதிக்கும்போது அதில் சர்க்கரை, நெய்விட்டு பொங்கி வரும் போது இறக்கி வைக்க வேண்டும்.

மைதா மாவை சலித்துக் கொள்ள வேண்டும்.

தேங்காயை துருவி சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

கசகசாவையும் வறுத்து, வறுத்த தேங்காய் துருவலுடன் மைதாவில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.

ஏலக்காயை பொடி செய்து மைதா கலவையில் போட வேண்டும்.

பின் இந்த மைதாவில் பால் மற்றும் சர்க்கரை கலவையை ஊற்றி சப்பாத்தி மாவை போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவை சப்பாத்தி போல் அப்பளமிட்டு தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் வெட்டிய பிஸ்கட்டை இதில் போட்டு இரண்டு புறமும் சிவந்ததும் எடுக்கவும்.

இதுதான் தேங்காய் பிஸ்கட். சாப்பிடுவதற்கு நன்கு மொரு மொருவென்று இருக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply