தூக்கத்தில் நடக்கும் வியாதியா? தெரிந்துகொள்ளுங்கள்

Loading...

தூக்கத்தில் நடக்கும் வியாதியா  தெரிந்துகொள்ளுங்கள்ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது சிலர் எழுந்து நடப்பார்கள், இவ்வாறு நடக்கும்போது இவர்களால் அதனை கவனத்தில் கொள்ள முடியாது.
அதுமட்டுமின்றி, தூக்கத்தில் நடந்தது கூட இவர்களுக்கு நினைவிருக்காது, சிலர் நடக்கையில் பேசக்கூட செய்வார்கள், இதற்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி என்று பெயர்.

பொதுவாக இந்த வியாதி 4 முதல் 8 வயதுடையவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.

அறிகுறிகள்

வீட்டின் அறைக்குள் அமைதியாக நடப்பார்கள், அல்லது அந்த அறையை விட்டு தப்பித்து ஓட முயற்சி செய்வார்கள்.

கண்களை திறந்துகொண்டே நடப்பார்கள், மேலும் வீட்டின் அறை முழுவதும் அவர்களது, கண்கள் அலைபாயும்.

அந்த நேரத்தில் அவர்களிடம் ஏதேனும் கேள்வி கேட்டால், மெதுவாக பதிலளிப்பார்கள் அல்லது உங்களது கேள்விகளுக்கு செவிசாய்க்காமல் சென்றுவிடுவார்கள்.

சிறு குழந்தைகள் தூக்கத்தின் இறுதியில் விரைவில் எழுந்து நடக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.

காரணங்கள்

இரட்டை குழந்தைகளுக்கு அதிகமாக இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கிறது.

தூக்கமின்றி இருத்தல்

குழப்பமான தூக்கம்

மன அழுத்தம்,

மது அருந்துதல்

ஏற்படும் விளைவுகள் என்ன?

இதயம் சார்ந்த பிரச்சனை

காய்ச்சல், நெஞ்செரிச்சல், இரவுநேர ஆஸ்த்துமா, இரவுநேர வலிப்பு, தூங்குபோது சுவாசிக்க பிரச்சனை, கால்நோய்கள் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

மனவியல் குறைபாடுகள், பல ஆளுமை நோய், பிந்தைய மன உளைச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எவ்வாறு தடுப்பது மற்றும் சிகிச்சைகள்

தூக்கத்திற்கு அடிமையாவதை தவிர்க்கவும், மன அழுத்தத்தை தவிர்க்கவும், தியானம் மேற்கொள்ளவும்.

தூங்குவதற்கு முன்னால் சினிமா பார்ப்பதை தவிர்க்கவும்.

தூங்குவதற்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான இடங்களை தெரிவு செய்யவும்.

கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிடவும்.

நீங்கள் தூங்கும் இடத்தில் அலாரம் அல்லது அறையில் அழைப்பு மணி இருத்தல் நல்லது.

sedative-hypnotics மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும், இது நல்ல தூக்கத்திற்கும் மன நிம்மத்திக்கும் வழிவகுக்கும்.

neuroleptics மாத்திரை – ஆற்றல் தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply