துளசியின் தீமைகள் பற்றி தெரியுமா?

Loading...

துளசியின் தீமைகள் பற்றி தெரியுமாதுளசி அனைவருக்கு தெரிந்த ஒரு நன்மை பயக்கும் மூலிகை. ஆனால் துளசியில் சில தீமைகளும் ஏற்படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், நன்மைகள் அதிகம் உள்ள இதே துளசியால், தீமைகளும் எற்படுகின்றன. துளசியின் தீங்குகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு. துளசியில் யூஜினால் என்ற வாசனை பொருள் அதிகம் உள்ளது. இந்த யூஜினாலை அதிகமாக உட்கொண்டால் அது விஷத்தன்மையை ஏற்படுத்தும். துளசி இரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி கொண்டது. எனவே அடிபட்டிருக்கும் போதும் இரத்தம் உறைவதற்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, துளசி எடுத்துக் கொண்டால் இரத்த உறைவு ஏற்படுவது தாமதமாகும். இளம்பெண்களுக்கு மாதவிடாய் வேளைகளில் துளசி இலைகளை உண்டால், இரத்தப்போக்கை அதிகரிக்கச் செய்யும். அடிக்கடி துளசியை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து கரு உருவாதில் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு துளசி உகந்தது இல்லை. கர்ப்பிணி பெண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் குழந்தை பிறப்பில் சிக்கலும், தாய்க்கும், சேய்க்கும் நீண்ட காலப் பாதிப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply