தினமும் ஊறுகாய் சாப்பிடாதீங்க

Loading...

தினமும் ஊறுகாய் சாப்பிடாதீங்கநம் உணவில் முக்கிய இடத்தை பிடிப்பது ஊறுகாய். ஊறுகாய் இல்லாமல் சிலருக்கு உணவே சாப்பிட பிடிக்காது. பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும். ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

எனவே ஊறுகாய் அதிகம் எடுப்பதையும், தினமும் உணவில் சேர்த்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும். எனவே தினமும் ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எதையும் அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN