தானியங்கி கார் வடிவமைப்பில் சம்சுங்

Loading...

தானியங்கி கார் வடிவமைப்பில் சம்சுங்கூகுள் நிறுவனம் உட்பட சில முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
இந் நிறுவனங்களின் கார்கள் தற்போது பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில் முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனமான சம்சுங்கும் தானியங்கி கார்களை வடிவமைக்கும் பணியில் இறங்கவுள்ளது.

ஆனால் சம்சுங் நிறுவனமானது ஏனைய நிறுவனங்களிலும் சில படிகள் மேலே சென்று பொழுதுபோக்கு அம்சங்கள், செய்மதி தொழில்நுட்பம், தானியங்கி தொழில்நுட்பம் என்பவற்றினை உள்ளடக்கியதாகவே இக்காரினை வடிவமைக்கவுள்ளது.

மேலும் இதனை முற்றுமுழுதாக மின்கலத்தில் இயங்கும் காராக மாற்றியமைப்பதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply