தற்கொலை செய்துகொள்ளப்போகிறீர்களா? இதோ காட்டிக்கொடுக்கும் ரத்தப்பரிசோதனை

Loading...

தற்கொலை செய்துகொள்ளப்போகிறீர்களா இதோ காட்டிக்கொடுக்கும் ரத்தப்பரிசோதனைதற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் உள்ளவர்களின் மனநிலையை ரத்தப் பரிசோதனை மூலமாக முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட உளவியல் ஆராய்ச்சி நிலையத்தின் நரம்பியல் துறை தலைவர் நிக்யூலெஸ்க்யூ தலைமையிலான குழுவினர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏராளமான ஆண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்களின் மனநிலை குறித்த கேள்விகள் தொடர்பாக அளிக்கப்பட்ட விடையில் தற்கொலை செய்ய நினைத்தவர்களைப் பற்றி 80 சதவிகிதம் சரியான முடிவுகள் கிடைத்ததாக இந்தக் குழு தெரிவித்துள்ளது.

யாருமே தற்கொலை எண்ணம் இருப்பதைப் பற்றி நேரடியாக பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள் என்பதால் இவர்களிடம் தற்கொலை தொடர்பான நேரடிக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது ஸ்மார்ட்போன்களில், இதற்கென உருவாக்கப்பட்ட செயலியின் உதவியாலும் இது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த மூன்றடுக்கு முறையில் நடந்த பரிசோதனைகளில் 92 சதவிகிதம் துல்லியமாக முடிவு கிடைத்துள்ளது.

இவ்வாறு தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பது முன்னரே கண்டறியப்படும்போது, அவர்களுக்கு முறையான மனநல ஆலோசனை வழங்க முடியும். அதன்மூலம் தற்கொலைகள் தடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வு தற்போது ஆண்களிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இனி, வருங்காலத்தில் இதே ஆய்வு பெண்களிடமும் நடத்தப்படவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply