தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வர…..!

Loading...

தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வர…..!தர்பூசணியில் விட்டமின் ஏ, பி6, சி மற்றும் லைகோபீன் (lycopene) சத்து (இது ஆஸ்துமா, ஹைபர் டென்ஷன், இதய படபடபடப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும்) என நிறைய சத்துகள் உள்ளன.
எல்லாவற்றையும்விட, இதில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால் வெயில் காலங்களில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து காக்கும்.
தர்பூசணியில் இருக்கும் தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற மருத்துவச் சத்துகள் வெயில் காலத்தில் ஏற்படும் அக்கி, வாய்ப் புண், குடல்புண், மூலம், அம்மை போன்றவற்றிலிருந்து காக்கும்.
தர்பூசணி சாப்பிடுவதால் ஒபிசிட்டி, இதய நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றின் தீவிரம் குறையும்.
சரும வறட்சி, மலச்சிக்கல், தசை வீக்கம் போன்றவற்றுக்கு தர்பூசணி கைகண்ட மருந்தாக உதவும்.
தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு வயோதிகம் தள்ளிப்போகும்.
எண்ணெய் வழியும் சருமம், கரும்புள்ளிகள், சரும வறட்சி, வயோதிக தோற்றம் போன்றவற்றைப் போக்க, தர்பூசணியின் சதைப்பகுதியை விதையுடன் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்து, அரை ஸ்பூன் பால் பவுடர், கால் ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து, கை, போன்ற வெயில் படும் இடங்களில் தடவி, பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால்… முகம் பொலிவடையும்.
அக்கி வந்தால், நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் காவி ஒரு ஸ்பூன், ஆவாரம்பூ பொடி ஒரு ஸ்பூன் மற்றும் தர்பூசணி ஒரு ஸ்பூன் கலந்து அக்கியின் மேல் பூசலாம். இதை தொடர்ந்து செய்துவந்தால்… அக்கி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
காதி கிராஃப்ட்டில் கிடைக்கும் குளிர்தாமரை தைலம் 2 ஸ்பூனுடன் தர்பூசணி 2 ஸ்பூன் கலந்து தலையில் தடவி, 2 – 3 மணி நேரத்துக்குப் பிறகு குளித்தால் உடல் சூடு, கண் எரிச்சல் எல்லாம் மாயமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply