தயிர் சாதம்

Loading...

தயிர் சாதம்தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
தயிர் – 1 கப்
பால் – 1/4 கப்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைபருப்பு – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
மோர் மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 ஆர்க்
பொடியாக நறுக்கிய மாங்காய் – 4 ஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி – 2 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு மோர் மிளகாயை பொரித்து தனியே எடுத்து வைக்கவும்..
பின்னர் கடுகு, கடலைபருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்த்து க்ரீம் போன்று சாப்டாக வரும் வரை நன்கு கலக்கவும்.

அதில் பொடியாக நறுக்கிய மாங்காய், நறுக்கிய கொத்துமல்லி, சாதம், 2 உதிர்த்த மோர்மிளகாய் சேர்த்து கலக்கவும்.

கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply