ஜில் ஜில் ரோஸ் ஃபலூடா

Loading...

ஜில் ஜில் ரோஸ் ஃபலூடாதேவையான பொருட்கள் :

ரோஸ் சிரப் – 2 டேபிள்ஸ்பூன்,

வேகவைத்த சேமியா – 2 டேபிள்ஸ்பூன்,

ஊற வைத்த சப்ஜா விதை – 1 டேபிள்ஸ்பூன்,

வெனிலா ஐஸ்க்ரீம் – 1 கப்,

ஐஸ் பால் – 2 பெரிய கப்.

செய்முறை:

• சப்ஜா விதையை 15 நிமிடம் ஊற வைத்தால் போதுமானது. ஒரு பிளெண்டரில் பாதி ஐஸ்க்ரீம், பாதி ரோஸ் சிரப், ஐஸ் பால் ஊற்றி நன்கு அடிக்கவும்.

• ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் சிறிது ரோஸ் சிரப்பை ஊற்றவும். அதில் ஊறிய சப்ஜா விதையைப் போடவும். மெதுவாக ஐஸ் பால் மிக்ஸை ஊற்றவும்.

• வேகவைத்த சேமியாவை அரை டீஸ்பூன் அளவாக கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் போடவும்.

• மேலே இன்னொரு சிறிய ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டுப் பரிமாறவும்.

உடலுக்கு குளுமையும் புத்துணர்ச்சியும் தரும் ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

புதினா, கொத்தமல்லி – அரை கட்டு
தக்காளி ஜூஸ் – அரை கப்
ஆரஞ்சு ஜூஸ் – அரை கப்
எலுமிச்சை ஜூஸ் – அரை கப்
இஞ்சி – சிறிது
சீரகம் – 1/2 ஸ்பூன்
தேன் – சுவைக்கு

செய்முறை:

* சீரகம், இஞ்சி, புதினா, கொத்தமல்லி ஆகியவைகளை மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.

* இதே போல் தக்காளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் சம அளவு எடுத்து, தேன், சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

* பழச்சாறுகளுடன் இஞ்சி, புதினா சாற்றை கலந்து மீண்டும் வடிகட்டவும்.

* பிரிட்ஜில் குளிர வைத்து பருகவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply