செவ்வாய் கிரகத்தில் செல்ஃபி : நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம்! | Tamil Serial Today Org

செவ்வாய் கிரகத்தில் செல்ஃபி : நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம்!

Loading...

செவ்வாய் கிரகத்தில் செல்ஃபி  நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம்!அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. நமது பூமியை ஒத்திருக்கும் அக்கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படங்களையும், தகவல்களையும் நாசாவுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள மோஜோவி பகுதியில் உள்ள மவுண்ட் ஷார்ப் என்ற இடத்தில் நின்றபடி தன்னைத் தானே கியூரியாசிட்டி செல்ஃபி படம் எடுத்துள்ளது. மவுண்ட் ஷார்ப் பகுதி 3 மைல் உயரமானது. இதன் கீழ் பக்கவாட்டுப்பகுதி பல நூறு பாறை அடுக்குகளைக் கொண்டதாகும். மோஜோவி 2 என்ற இடத்தில் விண்கலம் 2-வது துளைபோடும் பணியை தொடங்கி உள்ளது. இந்த மண் மாதிரி எடுத்து பூமியில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN