செல்வந்தர்களுக்கான கைப்பேசி அறிமுகம்

Loading...

செல்வந்தர்களுக்கான கைப்பேசி அறிமுகம்பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வெவ்வேறு நிறுவனங்கள் ஏட்டிக்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றன.
இவற்றின் வரிசையில் சுமார் 6000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஸமார்ட் கைப்பேசி ஒன்றும் இடம்பிடித்துள்ளது.
ஆடம்பரமானதும், விலையுயர்ந்ததுமான லம்போகினி கார் வடிவமைப்பு நிறுவனத்தினை நிர்வகிப்பவரான Ferruccio Lamborghini என்பரது மகனினால் நடாத்தப்படும் நிறுவனம் ஒன்றே இக்கைப்பேசியை தயாரித்துள்ளது.
88 Tauri எனும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய Gorilla Glass தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 20 மெகா பிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply