செட்டிநாடு துண்டு மீன் குழம்பு

Loading...

செட்டிநாடு துண்டு மீன் குழம்புஉணவுகளிலேயே செட்டிநாடு உணவு என்றால் அது தனிச்சுவைதான், எல்லோருக்கும் செட்டிநாடு சமையல் என்றாலே
நாவில் எச்சில் ஊறும். இதில் அசைவ உணவான துண்டு மீன் குழம்பு என்றால் கேட்கவும் வேண் டுமோ?
தேவையானவைகள்
துண்டு மீன்- 1/2கிலோ
மஞ்சள் தூள்- 1டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய்- தேவையான அளவு
பூண்டு –5 பல்
வெங்காயம் – 3
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம்- 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை–தேவையான அளவு
சீரகப் பொடிதேவையான அளவு
தக்காளி –2
மிளகாய் தூள்- தேவையான அளவு
சாம்பார் பொடி – தேவையான அளவு
புளி எலுமிசை அளவு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வை த்துக் கொள்ளவேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதன் பின் அதில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், வெந்தயம், கறிவேப் பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்துவதக்கவும். பிறகு அதில் தக்காளியை சேர்த் து, 8 அல்லது 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து, அதில் மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் மீன் துண்டுக ளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வை க்க வேண்டும். மீனானது நன்கு வெந்ததும், கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply