சூரியப் படலங்களுக்கான புதிய கண்ணாடிப்பூச்சு கண்டுபிடிப்பு

Loading...

சூரியப் படலங்களுக்கான புதிய கண்ணாடிப்பூச்சு கண்டுபிடிப்புசுவட்டு எரிபொருட்கள் தொடக்கம், அணு செறிவாக்கல் முறை வரை பல்வேறு முறைகள் மின்சக்தி உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும் அண்மைக்காலமாக சூரிய படலம் மூலமான மின் உற்பத்தியே பல நாடுகளில் பரிந்துரைக்கப்பட்டுவருவதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது.

இதனால் சூரிய படல மின்சக்தி உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சிகளும் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு அங்கமாக தற்போது எந்தவொரு கோணத்திலிருந்தும் சூரிய ஒளியை பெற்றுக்கொள்ளக்கூடிய விசேட கண்ணாடிப்பூச்சு ஒன்றினை சவுதி அரேபியாவிலுள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அப்துல்லா பல்கலைக்கழக (KAUST) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இவை தூசு படிவதிலிருந்து சுயமான பாதுகாப்பினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply