சுறா மீன் புட்டு

Loading...

சுறா மீன் புட்டுசுறா மீன் – 3 துண்டு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 17
சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தேங்காய் – கால் கப்

சுறா மீன் துண்டுகளை மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்துக் கொள்ளவும்.

மீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு மூடி 8 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பின்னர் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு, சோம்பு தூள், உப்பு போட்டு பிரட்டவும்.

அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீனை போட்டு 3 நிமிடங்களுக்கு கிளறி, அதனுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சுவையான சுறா மீன் புட்டு தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply